ஒரு குண்டு பல்பு மாற்றுவதற்கு 20 ஆயிரம் டாலர் சம்பளம் வழங்கப்படுவதாகப் பல ஆண்டுகளுக்கு முன் வெளியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தில் உள்ள பகுதி ரேபிட் சிட்டி. இந்தப் பகுதியைச் சேர்ந்த கெவின் ஷேமிட்த் என்பவர் ஒவ்வொரு முறையும் 457 அடி உயரமுள்ள கோபுரத்தின் மீது ஏறி பல்பை மாற்றுகிறார். அதற்காக இவருக்கு 20 ஆயிரம் டாலர் சம்பளம் வழங்கப்படுகிறது.
பலரும் இது பற்றிய விடியோவைப் பார்த்து இந்தக் கோபுரத்தில் ஏறி இறங்கவே 6 மாதம் ஆகிவிடும் போல இருக்கிறதே என்று கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
இது ஒரு தொலைத்தொடர்பு கோபுரம் என்றும், உலகிலேயே ஆபத்தான பணிகளில் இதுவும் ஒன்று என்றும் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது. பலராலும் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.