போர்ச்சுகலில் ரோப் கார் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் குளோரியா ஃபுனிகுலர் என்கிற ரோப் கார் சேவை, அங்கு வரலாற்றுச் சிறப்புமிக்கது.
மிகவும் குறுகலான சாலைகள் வழியாகப் பயணிக்கும் இந்த ரோப் கார், வழக்கம் போல் மக்களை ஏற்றிக் கொண்டு சென்றது.
அப்போது திடீரெனக் கட்டடத்தில் மோதியதில் தடம் புரண்டதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட 15க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 18 பேர்க் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தைத் தொடர்ந்து போர்ச்சுகல் நாட்டில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.