சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறைச் சம்மன் அனுப்பியுள்ளது.
ஒன் எக்ஸ் பெட் என்ற செயலியின் விளம்பரங்களில் ஷிகர்த் தவான் நடித்திருந்த நிலையில், அது குறித்து விளக்கம் பெறுவதற்காக இந்த நோட்டீஸை அனுப்பப்பட்டுள்ளது.
இது போன்ற பெட்டிங் செயலிகள் மக்களையும், முதலீட்டாளர்களையும் ஏமாற்றிப் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம், சுரேஷ் ரெய்னாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.