வங்கதேசத்தில் ரயிலின் மேற்புறத்தில் அமர்ந்து மக்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ரயிலில் இப்படிப் பயணிப்பதாக கூறப்படுகிறது. இதனால் மின் கம்பிகளில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் நிலவுகிறது.
இருந்தும் ஆபத்தை உணராமல் வங்கதேச மக்கள் இதுபோன்ற பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதங்களில் வைரலாகப் பரவி வருகிறது.