ஜப்பானில் விண்வெளி வீரர் எனக்கூறி மூதாட்டியை இளைஞர் ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஹொக்கைடோ தீவில் வசித்து வரும் 80 வயது மூதாட்டியிடம், சமூக வலைதளத்தில் இளைஞர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.
தொடர்ந்து மூதாட்டியிடம், தான் விண்வெளி வீரர் என்றும், தற்போது விண்வெளியில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் மூதாட்டியை காதலிப்பதாகவும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விண்கலத்தில் சிக்கித் தவிப்பதாகவும், ஆக்ஸிஜன் வாங்க அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகவும் அந்த இளைஞர் மூதாட்டியிடம் தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய காதல் வலையில் சிக்கிய மூதாட்டி, இளைஞரின் வங்கி கணக்கிற்கு, தன் வாழ்நாள் சேமிப்பான 6 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். ஆனால் அதற்குப் பின் எந்தத் தகவலையும் இளைஞர் தெரிவிக்காததால் ஏமாந்ததை உணர்ந்த மூதாட்டி, சைபர் கிரைமில் புகாரளித்துள்ளார்.