ஆஸ்திரேலியாவில் குடியேற்ற எதிர்ப்புப் போராட்டத்தில் உரையாற்றிய இந்திய இளைஞர் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினரின் குடியேற்றத்தைத் தடுக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அப்போது இந்தியர் ஒருவர் உரையாற்றினார்.
தான் சரியான காரணங்களுக்காகவே ஆஸ்திரேலியாவில் குடியேறியதாக அவர் தெரிவித்தார்.
குடியேற்றம் என்பது சலுகைகளைக் கோராமல், சமூகத்திற்குப் பங்களிப்பதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதனால் அந்த இளைஞர்த் தாக்கி வெளியேற்றப்பட்டார். இது குறித்த வீடியோ காட்சி வெளியான நிலையில் இந்திய இளைஞருக்கு ஆதரவாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.