தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக குமரகிரி தண்டாயுதபாணி கோயிலின் மலைப்பாதையைச் சீரமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள குமரகிரி தண்டாயுதபாணி கோயிலில் 2015ஆம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன.
கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதைக் குண்டும் குழியுமாக இருந்ததால், கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல முடியவில்லை எனக்கூறி காட்டி திருப்பணிகள் நிறுத்தப்பட்டன.
மலைப்பாதையைச் சரிசெய்யும் பணியைக் கோயில் நிர்வாகம் மேற்கொள்ளததால், திருப்பணிகள் நிறுத்தப்பட்டது குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி தொகுப்பு வெளியிட்டது.
இதன் எதிரொலியாக 10 ஆண்டுகளாகத் தடைபட்டிருந்த மலைப்பாதை மற்றும் கோயில் புனரமைப்பு பணிகளை அமைச்சர் ராஜேந்திரன் பூமி பூஜை நடத்தி தொடக்கி வைத்தார்.