சேலத்தில் கடந்த ஒரே மாதத்தில் 3 பேர் ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த தருமன் என்பவரை, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வளர்ப்பு நாய் கடித்துள்ளது.
இதையடுத்துச் சில வாரங்களுக்குப் பின்னர் தருமனுக்கு ரேபிஸ் நோய் தாக்குதல் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல கொங்கணாபுரத்தைச் சேர்ந்த குப்புசாமியும் வளர்ப்பு நாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி பலியானார். இந்த நிலையில், அஸ்தம்பட்டியை சேர்ந்த ஹரி என்பவரை சில நாட்களுக்கு முன்பு நாய் கடித்துள்ளது.
இதையடுத்து அவருக்கும் ரேபிஸ் நோய்த்தொற்று ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சேலத்தில் ரேபிஸ் நோய் தாக்குதலுக்கு ஒரே மாதத்தில் 3 பேர் உயிரிழந்திருப்பது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.