டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நவம்பர் 30ஆம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவது குறித்த வழக்கானது உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் 15 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் திட்டத்தை அமல்படுத்த அவகாசம் வழங்கக் கோரியும் தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அப்போது, காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த வழங்கப்பட்ட அவகாசம் ஏற்கனவே முடிவடைந்து விட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள்,
நவம்பர் 30ம் தேதிக்குள் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.