ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலுக்கு வந்ததும், அதன் சலுகைகளை உடனடியாக நுகர்வோருக்கு கடத்த வேண்டும் என தொழில் துறையினரை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், ஜிஎஸ்டி மறுசீரமைப்பால் கிடைக்கக் கூடிய ஒவ்வொரு ரூபாய் சேமிப்பும், நுகர்வோருக்குக்கு கிடைக்க செய்வதை தொழில் துறையினர் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்திய மண்ணில், இந்தியர்களின் உழைப்பில் உருவாகும் பொருட்களை ஆதரிக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்திய அவர், அத்தகைய பொருட்கள் நாட்டின் மூலை முடுக்கெங்கும் சென்று சேரும்போது, அது தேசத்தின் பெருமித அடையாளமாக, தற்சார்பு குறியீடாக மிளிரும் எனவும் தெரிவித்தார்.