திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுமார் 14 மாதங்களுக்கு பிறகு தங்கத்தேர் பவனி நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வந்தன. இதன் காரணமாக தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்ததால் சுமார் 14 மாதங்களுக்கு பிறகு தங்கத்தேர் பவனி நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து விழாவை தொடக்கி வைத்தனர். சுவாமி ஜெயந்தி நாதர், வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்கத்தேரில் எழுந்தருளிய காட்சியை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.