184 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 958 கிலோ கஞ்சாவை போலீசார் தீயிலிட்டு அழித்தனர்.
ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் கஞ்சா விற்பனை தொடர்பாக 184 வழக்குகள் பதியப்பட்டு 958 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தக் கஞ்சா பொட்டலங்களை நீதிமன்ற உத்தரவின்படி அழிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அதன்படி, நெல்லை மாவட்டத்தில் உள்ள எரிவாயு கூடத்தில், 958 கிலோ கஞ்சா பொட்டலங்கள் அழிக்கப்பட்டன.