உத்தரப்பிரதேசத்தில் சாலையோரம் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சஹாரன்பூர் அருகே சாலைப் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வழியாக 5 பேருடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது அங்கு தோண்டப்பட்டிருந்த 11 அடி ஆழமுள்ள அந்தப் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் காரில் பயணித்த ஐந்து பேரையும் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து அங்கு வந்த மீட்பு படையினர் காரை கிரேன் மூலம் மீட்டனர்.
சாலையோரத்தில் எச்சரிக்கைப் பலகை இல்லாததே விபத்துக்குக் காரணம் என கார் உரிமையாளர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவரளித்த புகாரின்பேரில் அலட்சியமாகச் செயல்பட்ட ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.