மேற்குவங்க சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் பாஜகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்ட பாஜக கொறடா சங்கர் கோஷ், காயமடைந்தார்.
பாஜக ஆளும் டெல்லி, அசாம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுவதாக, மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.
கடந்த செவ்வாய் கிழமைத் தொடங்கிய மேற்குவங்க சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடரில் சிறப்பு தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் சிறப்புக் கூட்டத்தின் மூன்றாம் நாளான வியாழக் கிழமையன்று, சிறப்பு தீர்மானத்தின் மீது மம்தா பானர்ஜி உரையாற்றினார். அவர் முன்வைத்த கருத்துகளுக்கு எதிராக பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.