புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், மோஸ் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
82 வயதான ஜோ பைடனுக்குத் தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. எலும்புகளுக்கும் நோய் பரவியதாகக் கூறப்பட்டது.
சமீபத்தில் பைடன் தலையில் காயத்துடன் தள்ளாடியபடி நின்ற வீடியோ ஒன்று வெளியாகி பேசுபொருளானது.
இந்நிலையில் புற்றுநோய்க்காக மோஸ் அறுவை சிகிச்சையை பைடன் மேற்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மோஸ் அறுவை சிகிச்சை என்பது தோல் புற்றுநோய்க்கான சிறப்பு அறுவை சிகிச்சையாகும். இது மிகவும் துல்லியமானது மற்றும் புற்றுநோய் செல்களை மட்டுமே அகற்றிச் சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களைப் பாதுகாக்கும் எனக் கூறப்படுகிறது.