நடிகர் அஜித் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் அனுமதியின்றி தனது பாடல்களைப் பயன்படுத்தியதாக கூறி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்த “குட் பேட் அக்லி ” திரைப்படம் அண்மையில் வெளியானது.
இப்படத்தில் இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன் உள்ளிட்ட தனது பாடல்கள் அனுமதியின்றிப் பயன்படுத்தி உள்ளதாகக் கூறி இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக வக்கில் நோட்டீஸ் அளித்தும் பட தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை என மனுவில் கூறப்பட்டிருந்தது.
எனவே படத்தில் உள்ள தனது பாடல்களை நீக்கவும் நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டுமெனவும் இளையராஜா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன்பாக வரும் 8ம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.