அதிக சொத்துக்கள் வைத்துள்ள முதல் 10 தமிழக அமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், சுமார் 29 கோடியே 7 லட்சம் ரூபாய் சொத்து மதிப்புடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது இடத்தில் உள்ளார்.
அதிக சொத்து மதிப்புள்ள தமிழக அமைச்சர்களில், 47 கோடியே 94 லட்சம் ரூபாய் சொத்து மதிப்புடன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி முதலிடத்தில் உள்ளார்.
41 கோடியே 81 லட்சம் ரூபாய் சொத்து மதிப்புடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இரண்டாவது இடத்திலும்,
38 கோடியே 89 லட்சம் ரூபாயுடன் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 3-ம் இடத்திலும் உள்ளனர்.
இதேபோல 30 கோடியே 80 லட்சம் ரூபாய் சொத்து மதிப்புடன் 4-ம் இடத்தில் அமைச்சர் துரைமுருகன், 29 கோடியே 7 லட்சம் ரூபாய் சொத்து மதிப்புடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது இடத்திலும் உள்ளனர்.
மேலும், அமைச்சர்கள் எ.வ.வேலு, சுவாமிநாதன், ரகுபதி, முத்துசாமி ஆகியோர் அதிக சொத்து வைத்திருப்பவர்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.