சிலி நாட்டில் கூண்டில் இருந்து விடுதலையான பென்குயின்கள், உற்சாகத்துடன் கடலை நோக்கி சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
சிலியில் அரிய வகை உயிரினமாக பென்குயின் உள்ளது. அவற்றைப் பாதுகாக்க அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடற்கரையில் 9 பென்குயின் குஞ்சுகள் ஆதரவின்றித் தவித்தன. அதனை கண்ட வனத்துறை அதிகாரிகள், பென்குயின்களை மீட்டு பராமரித்து வந்தனர்.
இந்நிலையில் அவை அனைத்தும் வளர்ந்து தனித்து வாழும் நிலையை எட்டியுள்ளன. இதனால் அந்தப் பென்குயின்கள் மீண்டும் கடற்கரையில் விடப்பட்டன.