நரிவேட்டை திரைப்படத்திற்காக சிறந்த ஆசிய நடிகருக்கான செப்டிமஸ் விருதை வென்று மலையாள நடிகர் டொவினோ தாமஸ் அசத்தியுள்ளார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் டொவினோ தாமஸ். மின்னல் முரளி, ARM, 2018 உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இந்நிலையில் டொவினோ தாமஸ் நடிப்பில் இயக்குநர் அனுராஜ் மனோஹர் இயக்கத்தில் உருவான நரிவேட்டை திரைப்படம் கடந்த மே 23 ஆம் தேதி வெளியானது.
இதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக டொவினோ தாமஸுக்குச் சிறந்த ஆசிய நடிகருக்கான செப்டிமஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் டொவினோ தாமஸ் விருதை பெற்றுக் கொண்டார்.