புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோயிலில் 54வது பிரமோற்சவ விழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த மாதம் 28-ம் தேதி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய ஹயக்ரீவர், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, தேரை வடம்பிடித்து இழுத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.