பிராமணர்களின் லாபத்திற்காக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதாக டிரம்பின் வர்த்தக ஆலோசகர்ப் பீட்டர் நவ்ரோ தெரிவித்த கருத்துக்குக் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
சமீபத்தில் பேட்டியளித்த பீட்டர் நவ்ரோ, இந்திய மக்கள் தங்கள் சொந்தக் காசை கொடுத்து ரஷ்யப் போருக்கு உதவுகிறார்கள் எனவும் இதை எல்லாம் செய்ய வைத்து பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள் எனவும் சர்ச்சையாகப் பேசியிருந்தார்.
இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா, இந்தியா மீதான அமெரிக்க வரிகளை நியாயப்படுத்தும் நவ்ரோவின் கருத்து ஆதாரமற்றது எனவும், அமெரிக்கா இதுபோன்ற அடிப்படையற்ற அறிக்கைகளை வெளியிடக் கூடாது எனவும் கூறினார்.
பாஜக எம்.பி தினேஷ் ஷர்மாவும், பீட்டர் நவ்ரோவின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். நவ்ரோவின் கருத்து உண்மைக்குப் புறம்பானது எனவும் இந்திய பொருளாதார முடிவுகளின் அடிப்படையில் சூழலுக்குப் புறம்பானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.