மெட்டா நிறுவனம் மீது மார்க் ஜுகர்பெர்க் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம், நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த மார்க் ஜுகர்பெர்க் என்பவர் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர் மெட்டா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் மெட்டா நிறுவனச் சிஇஓ மார்க் ஜுகர்பெர்கிற்கும் தனக்கும் ஒரே பெயர் இருப்பதால், தனது ஃபேஸ்புக் கணக்கு ஐந்து முறை முடக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
போலி பெயர், ஆள்மாறாட்டம் போன்ற குற்றச்சாட்டுகளில் தனது கணக்கு முடக்கப்பட்டதாகக் கூறிய வழக்கறிஞர் மார்க், இதற்காக மெட்டா நிறுவனம் இழப்பீடு தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
முதலில் மெட்டா நிறுவனச் சிஇஓ மார்க் ஜுகர்பெர்க், அவரது நிறுவனத்திற்கு எதிராகவே வழக்கு தொடர்ந்துள்ளதாக முதலில் சந்தேகம் எழுந்த நிலையில், இருவரும் வெவ்வேறு நபர்கள் எனத் தெரிந்தது பேசு பொருளாகி இருக்கிறது.