இந்திய விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் வேளாண் பொருள்கள் இறக்குமதி தொடா்பாக அமெரிக்காவுடன் எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் செளகான், இந்தியாவும் அமெரிக்காவும் சிறப்பான நட்புறவைக் கொண்டுள்ளதாகவும், கூடுதல் வரிவிதிப்பு காரணமாக இருநாடுகளிடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் குறித்து கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை எனவும் தெரிவித்தார்.
விவசாயிகள் பாதிக்கப்படக்கூடிய வகையில் அமெரிக்காவுடன் எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படாது என்றும், விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், ஜிஎஸ்டி சீா்திருத்தம் மூலம் தேசத்தின் நலனே முதன்மையானது என்பதை உலகுக்கு பிரதமா் மோடி எடுத்துக்காட்டி உள்ளதாகவும், மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்தார்.