உத்தரப்பிரதேசத்தில் வீட்டின் பரண் மேல் பதுங்கிய சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்பியை போலீசார் கைது செய்தனர்.
கன்னோஜ் மாவட்டத்தை சேர்ந்த கைஷ்கான், சமாஜ்வாதி கட்சியின் எம்பியாகப் பதவி வகித்தார். இவர் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட 5 கிரிமினல் வழக்குகள் உள்ளன.
இதனால் கடந்த ஜூலை 28 முதல் 6 மாதங்களுக்குக் கன்னோஜ் மாவட்டத்திற்குள் நுழையக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில் தடையை மீறி அவர் தனது வீட்டிற்கு வந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார், பெரும் படையுடன் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது போலீசார் வருவதை அறிந்த கைஷ்கான், வீட்டின் பரணில் ஏறி ஒளிந்து கொண்டார்.
பரண் மீது துணி போர்த்தப்பட்டு இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த போலீசார், உடனடியாக அதை விலக்கிப் பார்த்தபோது கைஷ்கான் ஒளிந்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கீழே இறக்கி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றம் எச்சரித்த நிலையில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.