திருவண்ணாமலை அருகே புதூர் மாரியம்மன் கோயில் முழுவதும் குப்பைகள், கழிவுநீர் நிறைந்து துர்நாற்றம் வீசி வருவதாகப் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
செங்கம் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் புதூர் மாரியம்மன் ஆலயம் உள்ளது.
இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் குப்பைகள், கழிவுநீர் நிறைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்குமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.