திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே இளம்பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திம்மிராயபுரத்தை சேர்ந்த விவேக் என்பவரின் மனைவியான நிஷாலினி தோட்டத்தில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வருவதற்கு முன்னரே நிஷாலினியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், வரதட்சணைக்காக நிஷாலினி கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறி செம்பட்டி காவல் நிலையம் முன்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.
















