அதிமுகவை ஒருங்கிணைக்கும் தனது பணி தொடரும் எனச் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்டம், குள்ளம்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிவர்,
தொண்டர்களின் கருத்தின்படியே அதிமுக ஒன்றிணைய வேண்டும் எனக் கூறினேன் என்றும் எனது கருத்து குறித்து கட்சி விளக்கம் கேட்டிருக்க வேண்டும் என்று செங்கோட்டையன் குறிப்பிட்டார்.
எந்தக் கருத்தையும் சொல்ல அதிமுகவில் தடை இல்லை எனப் பலர் பேசியிருக்கின்றனர் என்றும் நான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்குக் காலம் பதில் சொல்லும் என்று செங்கோட்டையன் கூறினார்.
பிரிந்து சென்ற அதிமுகவினரை ஒன்றிணைப்பது தொடர்பாகத் தான் என் பணி செல்லும் என்றும் எனது கருத்துக்கு ஆதரவாக அதிமுகவில் உள்ள சிலர் தொலைபேசியில் பேசியுள்ளனர் என செங்கோட்டையன் தெரிவித்தார்.