தாம்பரம் அருகே மழை நீர் ஓடையில், கழிவுநீர் வெளியேற்றப்படுவதால் ஏரி நீர் மாசடைவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாநகராட்சிக்கு உட்பட்ட 37 ஆவது வார்டு பகுதியில் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதில் சேகரிக்கப்படும் கழிவுநீர், மழைநீர் ஓடையில் வெளியேற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால் செம்பாக்கம் ஏரி நீர் மாசடைவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.