கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் இருந்து ரசாயன கசிவு ஏற்படவில்லை எனவும் நீராவிதான் வெளியேறியது எனவும் ஆலை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கடலூர் சிப்காட்டில் உள்ள ஆர்கானிக் ரசாயன தொழிற்சாலையில் குழாய் உடைந்ததால் ரசாயன கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் 93 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே ஆலையில் நடந்தது விபத்தே அல்ல எனவும் நீராவிதான் வெளியேறியது என்றும் ஆலை நிர்வாக இயக்குநர் ரமேஷ் பிரபாகரன் கூறியுள்ளார்.
தொழிற்சாலையை மூட வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இதுபோன்று அவதூறு பரப்பப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.