பூட்டானில் 570 மெகா வாட் வாங்சு நீர்மின் திட்டத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் அதானி குழுமம் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தமானது அதானி நிறுவனத்திற்கும், பூட்டானின் கிரீன் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே மற்றும் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி முன்னிலையில் கையெழுத்தானது. இந்தச் சந்திப்பின் போது இருவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி அன்பு பாராட்டினர்.