ஜிஎஸ்டி சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதை தனிப்பட்ட முறையில் கண்காணிப்பேன் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதுகுறித்து தனியார் ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அவர், பொருட்களின் விலை குறைப்பு பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிப்போம் என தொழில் மற்றும் வணிகத் துறையினர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மூலமாக சாமானிய மக்களுக்கு நிம்மதி ஏற்படுத்த அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து முன்வந்துள்ளதாகவும் ஜிஎஸ்டி சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதை தனிப்பட்ட முறையில் கண்காணிப்பேன் எனவும் கூறினார்.
ஜிஎஸ்டி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாட்டை தவறாக வழிநடத்துவதாக குற்றம்சாட்டிய நிர்மலா சீதாராமன், இந்திய நாட்டுக்கு இன்னும் திறன்வாய்ந்த எதிர்க்கட்சி இருந்தால் பொருத்தமாக இருக்கும் எனவும் சாடினார்.