சென்னை ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
தியாகராய நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம பள்ளியில் 14ம் ஆண்டாக முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்துடன் வந்திருந்தனர்.
அப்போது அவர்கள் தங்களது சிறு வயது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். விழாவின் சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் நல்லி குப்புசாமி, இந்திய அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் டி.ஏ.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.