கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோயிலில், சந்திர கிரகணத்தை ஒட்டி, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆவணி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகராஜா சிலைக்கு பக்தர்கள் மஞ்சள் பொடி தூவி, பால் ஊற்றினர். இன்று சந்திர கிரகணம் என்பதால் மாலை ஆறு முப்பது மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். பின்னர் பரிகார பூஜைகள் நடைபெற்று நடை சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.