கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே இடப்பிரச்னை காரணமாக 58 வயது பெண்ணை மரத்தில் கட்டி வைத்து ஆடைகளை களைந்து அவமானப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லிதோப்பு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் அவரது உறவினர்களான அனுராதா, ஜெயந்தி, ஜெயப்பிரதா ஆகியோருக்கும் இடையே 21 சென்ட் இடத்தில் வீடு கட்டுவது தொடர்பாக பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இடப்பிரச்னை தொடர்பாக அந்த பெண்ணுக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அப்பெண்ணை மரத்தில் கட்டிவைத்து ஆடைகளை களைந்து 3 பெண்களும் தாக்கியுள்ளனர்.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில் 3 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அனுராதா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.