திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் உணவு தானிய மூட்டைகளை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியில் மின்வாரிய ஊழியர் ஜெயபால் என்பவர், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இரவில் வீட்டில் குடும்பத்தினருடன் வழக்கம்போல் அவர் உறங்க சென்றுள்ளார். அப்போது, வீட்டின் முன்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த 2 இருசக்கர வாகனங்கள் மீது பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.
பெட்ரோல் டேங்க் வெடித்த சத்தம் கேட்டு எழுந்து வந்த ஜெயபால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தார்.
இந்த விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்த நிலையில், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.