ஜிஎஸ்டி சீர்திருத்தம், கார் விற்பனையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. பல்வேறு நிறுவனங்களின் கார்கள் கணிசமாக விலை குறையும் நிலையில், டொயோட்டா நிறுவன கார்களின் விலையும் சரிந்துள்ளது. அது குறித்து தற்போது பார்க்கலாம்…
டெல்லியில் அண்மையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்கும் வகையில் வரி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 28 சதவிகிதமாக இருந்த ஜிஎஸ்டி 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, சிறிய ரக கார்களின் விலை கிட்டத்தட்ட 40 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை விலை குறையும் என அறிவிக்கப்பட்டது…
அந்த வகையில் ஜப்பானின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா SUV ரக கார்களின் விலையும் லட்சக் கணக்கில் குறைந்துள்ளது. ஜிஎஸ்டி குறைப்பின் மூலம் கிடைக்கும் முழு பலனும் வாடிக்கையாளர்களுக்கே வழங்கப்படும் என டொயோட்டா நிறுவனம் தெளிவாகக் கூறியதே இதற்கு காரணம்…
Tata Motors and Renault நிறுவனங்கள் கார்களின் விலையை குறைத்து அறிவித்த நிலையில், டொயோட்டா நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கியுள்ளளது…
அதன்படி 10 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் விலை கொண்ட Rumion கார் 48 ஆயிரத்து 700 ரூபாய் வரையிலும், Urban Cruiser Hyrider கார் விலை 65 ஆயிரத்து 400 வரையிலும் விலை குறையும்.
Glanza கார் 85 ஆயிரத்து 300 ரூபாய் வரையிலும்,Taiser கார் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 100 ரூபாய் வரையிலும் மலிவாக கிடைக்கும்.
கார் பிரியர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற Innova Crysta கார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரையிலும், Innova Hycross விலை ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலை குறைகின்றன.
ஜைசாண்டிக்கான Fortuner காரின் விலை அதிகபட்சமாக மூன்று லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் வரை விலை குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Legender கார் விலை மூன்று லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் வரையிலும் குறைகிறது.
Luxury MPV Vellfire கார் 2 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் வரையிலும், Hilux pickup 2 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் வரையிலும் மலிவாக கிடைக்கும்.
புதிய முறையின் கீழ், 1200 சிசிக்கு மேல் பெட்ரோல் எஞ்சின்கள் மற்றும் 1500 சிசிக்கு மேல் டீசல் எஞ்சின்கள் மற்றும் 4000 மில்லி மீட்டருக்கு மேல் நீளமுள்ள வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 45 முதல் 50 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது 40 சதவிகிதமாக குறைக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணம்… டொயோட்டா ஃபார்ச்சூனர், மஹிந்திரா XUV700 அல்லது இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு செடான்கள் போன்ற வாகனங்களை வாங்க திட்டமிட்டிருக்கும் கார் வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 22 முதல் பயனைப் பெறுவார்கள்….