டிரம்ப் அளித்த விருந்தில் தடுமாறிய ஜாம்பவான்கள் : வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன? - சிறப்பு தொகுப்பு!
Sep 10, 2026, 01:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிரம்ப் அளித்த விருந்தில் தடுமாறிய ஜாம்பவான்கள் : வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 7, 2025, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச அளவில் ஐபோன் உற்பத்திக்கான மையமாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு… இதற்காக மத்திய அரசு எடுத்த முயற்சியின் பலனாக, இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது சந்தையை விரிவுபடுத்தி வருகிறது.. ஆனால், அதற்கு ஆரம்ப காலம் முதலே முட்டுக்கட்டை போட்டு வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்…

அண்மையில் கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த வணிகக் கூட்டத்தில் பங்கேற்ற டிரம்ப், இந்தியாவில் ஐ-போன்களை தயாரித்து, அமெரிக்காவில் விற்பனை செய்வது இந்தியாவுக்கே பலனளிக்கும் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார். இந்தியாவுக்கு உதவ விரும்பினால் பரவாயில்லை என்று குறிப்பிட்டிருந்த டிரம்ப், இந்தியாவில் தயாரிப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்திருந்தார்…

ஆனால், டிரம்ப்பின் பேச்சை ஒதுக்கித் தள்ளிய ஆப்பிள் நிறுவன CEO, இந்தியாவில் முதலீடு செய்வதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று தனது கருத்தை பதிவு செய்திருந்தார். இந்தியாவில் கடந்த நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனம் 79 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியதே அதற்குக் காரணம்… இது 2024ம் ஆண்டின் 3ம் காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் கணித்ததை விட வலுவான வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது…

இந்நிலையில்தான், வெள்ளை மாளிகையில், பெரிய தொழில்நுட்ப நிறுவன ஜாம்பவான்களுக்கு விருந்தளித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

ஆப்பிள் தலைமை நிர்வாக இயக்குநர் டிம் குக், கூகுள் மற்றும் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர்பிச்சை, மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா போன்ற தொழில்நுட்ப நிறுவன அதிகாரிகள் பலர் பங்கேற்றிருந்தனர்.

விருந்துக்கு பின் வேட்டு வைக்கும் வகையில் தொழில்நுட்ப நிறுவனங்களை நோக்கி நேரடியாக அமெரிக்காவில் எவ்வளவு முதலீடு செய்வீர்கள் என்ற கேள்வியை முன் வைத்தார் டிரம்ப்…. குறிப்பாக ஆப்பிள் நிறுவன CEO-விடம் அமெரிக்காவில் நீங்கள் எவ்வளவு முதலீடு செய்யப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவன திட்டங்கள் ஏற்கெனவே டிரம்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அமெரிக்காவில் 600 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்வதாக டிம் குக் தெரிவித்தார். மேலும் அமெரிக்காவில் பெரிய முதலீட்டை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தியதற்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

இதேபோன்று மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களிடம் வரிசையாக கேள்வி எழுப்பி, இந்தியா மீதான வரி விதிப்புக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில், அமெரிக்காவில் முதலீட்டை ஈர்ப்பதற்கும், சலுகைகளை வழங்குவதற்கும் தயாராகி வருகிறார் டிரம்ப்… அதன் விளைவாகவே தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விருந்து வைத்து கறார் காட்டியிருக்கிறார் என்ற விமர்சனங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன…

Tags: pple CEO Tim CookCEO Sundar PichaiMicrosoft CEO Satya NadellagoogleWhite houseUS President TrumpTrump hosted party
Share
Tweet
SendShare
Previous Post

பிரம்மோற்சவ விழா – வேலூரில் திருப்பதி திருக்குடைகள் மற்றும் தங்கப் பாதம் புறப்பாடு ஊர்வலம்!

Next Post

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – இன்று மாதிரி வாக்குப்பதிவு!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies