பாளையங்கோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டியின் மாநில மாநாட்டில் 90 சதவீதத்திற்கு மேலான இருக்கைகள் காலியாக இருந்தன.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது.
இதில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், கட்சியின் அகில இந்திய மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோதன்கர், சூரஜ் ஹெக்டே, பவன் ஹரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர். மாநாடு தொடங்கிய சிறிது நேரத்திலேயே கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைய தொடங்கியது.
ஒரு கட்டத்தில், 90 சதவீதத்திற்கும் அதிகமான கூட்டம் கலையவே, காலி இருக்கைகளை நோக்கி காங்கிரஸ் தலைவர்கள் உரை நிகழ்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது.