திருத்தணி அருகே 2 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அலமேலு மங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், ஆகாஷ் என்ற இருவர் இருசக்கர வாகனத்தில் மத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர் . அப்போது மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரும் பைக்கில் வந்துள்ளார்.
இரு வாகனங்களும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்ட விபத்தில் கோவிந்தன் மற்றும் தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த இருவர் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
















