திராவிட மாடல் அரசியலை பிரிவினைவாத மனநிலை ஆக்கிரமித்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், திமுக ஆட்சியில் தமிழக அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், சாதி வன்முறை, போதைப்பொருள் புழக்கம் ஆகியவை அதிகரித்து காணப்படுவதாக குற்றம் சாட்டினார்.
ஊழல் மற்றும் சாதி மோதல்கள் தொடர்பான குற்றச் சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாத திமுக அரசு, பாஜவுக்கு எதிராக மொழி மற்றும் திராவிட கொள்கை குறித்த விவகாரங்களை எழுப்புவதாக சாடினார்.
ஊழல் விவகாரங்களில் கவனம் செலுத்தாமல், பிரிவினைவாத விஷயங்கனை முன்னிறுத்துவதாக கூறியுள்ள அவர், தமிழகத்தின் வரிப்பணம் பீகார் மாநிலத்துக்கு செல்வதாக திமுக அரசு குற்றம் சாட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
பீகார் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது எனக் கேள்வி எழுப்பியுள்ள நிர்மலா சீதாராமன்,
பீகாரைச் சேர்ந்த மக்கள் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றி லாபம் ஈட்டி தருகின்றனர் என குறிப்பிட்டார். மேலும், திராவிட மாடல் அரசியலை பிரிவினைவாத மனநிலை ஆக்கிரமித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.