இந்திய ஹாக்கி அணியின் வெற்றிப் பயணம் தொடரட்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், . ஆசியக் கோப்பை தொடரில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, இறுதிப் போட்டியில் தென் கொரியா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றிருப்பது, கோடிக்கணக்கான இந்தியர்களின் மத்தியில் நம்பிக்கையை விதைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கான கதவுகளைத் திறந்துவைத்துள்ளது. இந்திய ஹாக்கி அணியின் வெற்றிப் பயணம் தொடரட்டும்! நம் தேசம் மிளிரட்டும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.