மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் மல்லை சத்யாவை மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டார்.
வைகோவின் தகுதி நீக்க அறிவிப்பை பதிவு அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலமாக பெற்ற மல்லை சத்யா, அந்த கடிதத்திற்கு பதில் அனுப்பினார். மல்லை சத்யாவின் பதில் கடிதத்தை ஆய்வு செய்த மதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், மல்லை சத்யா மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிமுகவின் கொள்கை குறிக்கோள், நன்மதிப்பு, ஒற்றுமை ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளான மல்லை சத்யா மதிமுகவின் துணை பொதுச்செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவிட்டுள்ளது.