ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் அரசு முறைப் பயணத்தின் மூலம் 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் முதலீடு ஈர்த்து வந்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், வெளிநாட்டுப் பயணங்களை நிறைவு செய்து சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் அரசு பயணம் மேற்கொண்டு மன நிறைவோடு திரும்பி இருப்பதாகத் தெரிவித்தார். இந்த அரசு முறைப் பயணத்தில் தமிழகத்திற்கு 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் முதலீடு ஈர்த்த வந்திருப்பதாகக் கூறினார். 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கக்கூடிய வகையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.