உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி பகுதியில் மீண்டும் மேகவெடிப்பு காரணமாகத் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
உத்தராகண்டில் உள்ள யமுனா பள்ளத்தாக்கில் மேகவெடிப்பு ஏற்பட்டு, நௌகாவ் பகுதியில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் யமுனா பள்ளத்தாக்கில் உள்ள சியோரி பால் பட்டி என்ற இடத்தில் நிகழ்ந்ததாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஆர்யா தெரிவித்திருக்கிறார்.
திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகள் மற்றும் கடைகள் சேதம் அடைந்தன. மேலும், ஏராளமான வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இருப்பினும் உயிரிழப்பு குறித்து விவரங்கள் இதுவரை வெளிவரவில்லை. இந்நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழு நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.