உத்தராகண்ட் மாநிலத்தில் ரயில் பாதையில் தண்டவாளத்தின் மீது பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்துள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஹரித்துவாரில் இருந்து ரிஷிகேஷ் செல்லும் ரயில் பாதையில் திடீரென மலைகளின் மீதிருந்து பாறைகள் உருண்டு விழுந்தது.
இதனால் அவ்வழியாகச் செல்லும் ரயில்கள், அருகில் உள்ள நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது பாறைகளை அகற்றி, ரயில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.