மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட சிலைகளை விசர்ஜனம் செய்யும் நிகழ்ச்சியால் கடற்கரையே விழாக்கோலம் பூண்டது.
கடந்த 27-ம் தேதி தொடங்கிய விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பை மாநகர் முழுவதும் சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் சிலைகள் நிறுவப்பட்டிருந்தன.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நிறைவடைந்ததையடுத்து, கடலில் கரைப்பதற்காகச் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன.
அப்போது புகழ்பெற்ற லால்பாக்சா ராஜ விநாயகர் சிலையை தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி நேரில் தரிசனம் செய்தார்.
இறுதியில் நகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான சிலைகள் மும்பையில் உள்ள கிர்கான் சௌபட்டி கடற்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டுக் கரைக்கப்பட்டன. அப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்ததால் கடற்கரையே விழாக்கோலம் பூண்டது.