நைஜீரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் புலம் பெயா்ந்த உள்நாட்டு அகதிகள் முகாமில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தவா்கள் மீது மத பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
வடகிழக்குப் பகுதியில் உள்ள தாருல் ஜமா நகரில் மோட்டார் சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள் முகாம்களில் இருந்து திரும்பியவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு வீடுகளுக்குத் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் ஐந்து ராணுவத்தினர் உட்பட 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.