கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 4 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காளிபுரா லே – அவுட் பகுதியை சேர்ந்த 4 சிறுவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சிறுவர்களின் வாகனம் மீது பின்னால் வந்துகொண்டிருந்த கார் மோதியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் 4 சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.