இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்தது சரியான யோசனை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், 50 சதவீதம் வரி விதித்தார்.
இதுதொடர்பாக விளக்கம் அளித்த அமெரிக்கா, உக்ரைனுக்கு எதிராகப் போர் செய்து வரும் ரஷ்யாவின் வருவாயை குறைக்க கூடுதல் வரி விதிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.
இந்நிலையில் இந்தியா மீது வரி விதித்தது சரியான யோசனை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஆற்றல்தான் ரஷ்யாவின் ஆயுதம் எனவும் அந்த ஆயுதத்தைக் கழற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்பு பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாகப் போர் நிறுத்தம் குறித்து ஆலோசனை நடத்திய ஜெலன்ஸ்கி, தற்போது அமெரிக்காவின் வரிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.