கர்நாடகாவின் பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை யானை விரட்டிய காட்சி வெளியாகி உள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலா பயணி ஒருவர் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது அங்கு வந்த யானை, திடீரெனக் காரை துரத்தியது.
இதனால் அச்சமடைந்த ஓட்டுநர் வாகனத்தை வேகமாகப் பின்னோக்கி எடுத்தார். எனினும் அந்தக் காரை யானை தொடர்ந்து விரட்டியது.
ஒரு கட்டத்தில் களைப்படைந்த யானை காட்டிற்குள் சென்றது. இந்தக் காட்சியை வாகனத்தில் இருந்த ஒருவர் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.